EXCLUSIVE: பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்த ஓரிரு நாட்களில் அப்பாயின்மென்ட் கிடைப்பதால் கோவைக்குப் படையெடுக்கும் கேரள மக்கள்: நோய்த்தொற்று காலத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாக உள்ளூர் பயனாளிகள் புகார்

பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்த ஓரிரு நாட்களில் அப்பாயின்மென்ட் கிடைப்பதால் கோவைக்குப் படையெடுக்கும் கேரள மக்களால் நோய்த்தொற்று காலத்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகத் தமிழக பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.



கோவை: கோவை உள்பட 6 மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது மண்டல பாஸ்போர்ட் அலுவலகம். கோவையில், உப்பிலிபாளையம் பகுதியில் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி அலுவலகம் மற்றும் அவிநாசி ரோடு சித்ரா அருகே பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகமும் செயல்பட்டு வருகின்றன.

பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்த ஓரிரு தினங்களில் பயனாளிகளுக்கு அப்பாயின்மென்ட் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் கோவை மட்டுமின்றி குறிப்பாகக் கேரளாவைச் சேர்ந்த மக்கள் நூற்றுக்கணக்கானோர் தினமும் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அப்பாயின்மென்ட் பெற்று அலுவலகத்திற்கு வந்து செல்வதாகவும், இதனால் கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதாகவும் பயனாளிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பயனாளிகள் சிலர் கூறியதாவது:-

"கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் பல விருதுகளை பெற்றுள்ளது. அவிநாசி ரோட்டில் சித்ரா அருகே அமைந்துள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகம் ஐந்து நட்சத்திர ஓட்டல் போன்று கட்டமைப்பு மற்றும் பயனாளிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி குறிப்பாகக் கேரளாவைச் சேர்ந்த மக்கள் மிக அதிக அளவில் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அப்பாயின்ட்மென்ட் பெற்று. தினமும் கோவைக்கு வந்து செல்கின்றனர்.

இதனால் மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏ, பி, சி கவுன்ட்டர்களில் 'ஏ' கவுன்ட்டரில் மிக விரைவாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பி, சி கவுன்ட்டர்களில் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுகிறது. அங்கு 30 பேர் மட்டுமே அமரக்கூடிய வகையில் இருக்கைகள் உள்ள நிலையில், ஒரே நேரத்தில் 100 க்கும் மேற்பட்டோர் அந்த இடத்தில் ஒன்று கூடுகின்றனர். இதனால் மிகுந்த கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

நோய் தொற்று அபாயம் உள்ளது. கேரளாவில் கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின் பாஸ்போர்ட் பெற அப்பாயின்மென்ட் வழங்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. கோவையில் செயல்படும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து ஓரிரு நாட்களில் அப்பாயின்ட்மென்ட் கிடைப்பதால் கேரளாவை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். கொரோனா நோய் தொற்று நோய் பரவல் மட்டுமின்றி தற்போது 'ஓமைக்ரான்' வைரஸ் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவி வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் கூட்ட நெரிசல் இல்லாமல் பயனாளிகள் அனைவரும் உரிய நேரத்தில் தங்களது பணிகளை முடித்து விட்டு செல்லும் வகையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பாஸ்போர்ட் பயனாளிகள் தெரிவித்தனர்.

கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது:-

பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களுக்குத் தேவையான சேவை உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

நோய்த்தொற்று பரவலுக்கு பின் தற்பொழுது மீண்டும் விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. கூட்ட நெரிசல் என்பது தற்காலிகமான பிரச்சினைதான். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

இருப்பினும் முதியவர்கள், பச்சிளம் குழந்தை வைத்துள்ள தாய்மார்கள் உள்ளிட்டவர்களுக்கு எந்தவித சிரமமும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேரளாவில், பாஸ்போர்ட் பயனாளிகள் அப்பாயின்ட்மெண்ட் பெற 18 நாட்கள் வரை காலதாமதம் ஏற்படுகிறது. ஆனால் கோவையில் ஓரிரு நாட்களில் அப்பாயின்மென்ட் கிடைத்து விடுகிறது. அந்த அளவுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் குறிப்பிட்ட மண்டலங்களில் மட்டும் சேவையை பெறுவதைத் தவிர்த்து தேவையான ஆவணங்களுடன் நாட்டிலுள்ள எந்த மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் சேவையைப் பெறலாம் என அரசு புதிய விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகவே கேரளாவை சேர்ந்த மக்கள் பின்னர் கோவைக்கு வந்து சேவை பெற்று செல்கின்றனர். எதிர்வரும் நாட்களிலும் பாஸ்போர்ட் பயனாளிகள் அனைவருக்கும் தேவையான உதவிகளை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் தொடர்ந்து வழங்கப்படும்.

இவ்வாறு பாஸ்போர்ட் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...