கோவை செட்டிபாளையம் அருகே உள்ள தேவாலயம் அரசு அனுமதி பெற்று நடைபெறுகின்றதா என விசாரணை நடத்தக் கோரி இந்து முன்னணியினர் மனு..!

அரசு வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல் சத்தமாக ஒலிபெருக்கி மூலம் மதபிரச்சாரம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.


கோவை: கோவை செட்டிபாளையம் அருகே உள்ள தேவாலயமானது அரசு அனுமதி பெற்று நடைபெறுகின்றதா என்று விசாரணை நடத்த வேண்டும் என இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் செட்டிபாளையத்திற்கு உட்பட்ட போஸ்டல் காலனி பகுதியில் தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அங்கு அரசின் எவ்வித அனுமதியும் இல்லாமல் முறைகேடாக அரசு வழிமுறைகள் எதையும் பின்பற்றாமல் சத்தமாக ஒலிபெருக்கி மூலம் மதபிரச்சாரம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், ஆலயம் அமையப்பெற்றுள்ள பகுதியானது இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்றும், வெளியூரில் இருந்து அனைவரையும் கூட்டி வந்து ஆலயத்தில் பிரார்த்தனை நடத்துவதால் சாலையின் பாதி பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் தேவாலயத்தை விரிவாக்கம் செய்வதற்காக இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...