பொள்ளாச்சி அருகே பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்..!

பொள்ளாச்சி அருகே பள்ளி பராமரிப்பிற்கு அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்ததாகத் தலைமை ஆசிரியை கண்டித்து பள்ளியைப் பெற்றோர்கள் முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பள்ளி பராமரிப்பிற்கு அரசு ஒதுக்கிய நிதியை முறைகேடு செய்ததாகத் தலைமை ஆசிரியை கண்டித்து பள்ளியைப் பெற்றோர்கள் முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் பகுதியில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 150-மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் மற்றும் ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.



இந்நிலையில் மாணவர்களுக்கு முறையாகக் கல்வி பயிற்றுவிப்பதில்லை, கழிப்பிடம் மற்றும் பள்ளியைச் சுகாதாரமாக வைப்பதில்லை என கூறி இன்று பள்ளியைப் பெற்றோர்கள் திடீரென முற்றுகையிட்டு தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், பள்ளி கழிப்பிடம் சுகாதாரமாக இல்லாததால் மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், தலைமை ஆசிரியர் உணவருந்திய பாத்திரங்களை மாணவர்களைக் கழுவச் சொல்வதாகவும், பள்ளி மேலாண்மை குழுவில் மாணவர்களின் பெற்றோர்களைத் தவிரத் தலைமை ஆசிரியரின் கணவர், மற்றும் உறவினர்களைச் சேர்த்துக் கொண்டு செயல்படுவதால் ஆண்டு தோறும் பள்ளி பராமரிப்பு செலவினங்களுக்கு வரும் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி வருவதாகவும் தலைமை ஆசிரியர் மீது பெற்றோர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் டெங்குகாய்ச்சல் பாதிப்பால் இறந்ததாகவும் இதற்கு பள்ளியின் சுகாதாரம் கேள்விக்குறியாக இருப்பதே காரணம் என்றும் குற்றம் சாட்டிய பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி முற்றுகை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர் இதையடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...