மகன்கள் இருவரையும் அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள அவர், வயதான எங்களுக்கு உதவும்படி கண்ணீருடன் மனு அளித்தார்.
கோவை: கோவையில் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட தாய் கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவை மாவட்டம் சௌரிபாளையம் பழனியப்பா நகரை சேர்ந்தவர் விமலா. இவர் இதயநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு கிருஷ்ண பிரகாஷ், ஹரிகிருஷ்ணன் ஆகிய 2 மகன்கள் உள்ளதாகவும் இவருடைய கணவர் கை, கால்கள் செயல்படாத நிலையில் வீட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர் கண்ணீர் மல்க கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;
தனது 2 மகன்களை படிக்க வைத்து, நல்ல வேலை வாங்கி கொடுத்துள்ளதாக கூறிய அவர், மகன்கள் இருவரும் என்னை கவனிப்பதில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
தற்போது, அவரும், அவர் கணவரும் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருந்து வருகிறோம். இளைய மகன் என்னை ஜெயிலில் போட்டாலும் பணம் தரமுடியாது என கூறுகிறார். சாப்பாட்டிற்கே பணம் இல்லை என்று கேட்டால், தகாத வார்த்தைகளால் திட்டி அடித்துத் துன்புறுத்துகின்றனர் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், மகன்கள் இருவரையும் அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ள அவர், வயதான எங்களுக்கு உதவும்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் மனு அளித்தார்.