கோவையில் பஞ்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள கொத்தடிமைகளை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு மனு..!

மேலும், மாவட்ட நிர்வாகம் நேரில் சென்று ஆய்வு செய்வதோடு, கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு இருப்போரை உடனடியாக மீட்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் பஞ்சாலைகளில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள கொத்தடிமைகளை மீட்கக் கோரி சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை உடையாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த கற்பகம் ஸ்பின்னிங் மில்லில் பணியாற்றி வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவரை நிறுவனத்தின் மனிதவள மேலாளர் முத்தையா மற்றும் விடுதி காப்பாளர் லதா ஆகியோர் லத்தியால் அடித்தும், காலால் உதைத்தும் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது தொடர்பாக போலீசார் இருவர் மீது பெண் வன்கொடுமை உட்பட 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில், இது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சிஐடியு தொழிற்சங்கத்தினர் வந்திருந்தனர். அப்போது, ஆட்சியர் அலுவலகம் முன்பு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இருவரையும் கைது செய்யக்கோரியும், நிர்வாகத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கோவையில் செயல்பட்டு வரும் 300க்கும் மேற்பட்ட பஞ்சாலைகளில் பல நிர்வாகத்தினர், இளம்பெண்களை கேம்ப் தொழிலாளிகள் என்ற பெயரில் கொத்தடிமைகளாக அடைத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார்.

மேலும், இதனை மாவட்ட நிர்வாகம் நேரில் சென்று ஆய்வு செய்வதோடு, கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருப்போரை உடனடியாக மீட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...