கோவையில் சிறுமிகளிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம்; 2 பேர் போக்சோவில் கைது ..!

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவுசல்யா விசாரணை நடத்தி, லிங்கேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.


கோவை: கோவையில் 13 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.

கோவை சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் கர்ணன் என்ற லிங்கேசன் (33) தச்சுதொழிலாளி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியை 13 வயது சிறுமியுடன் நெருங்கி பழகினார். பின்னர் லிங்கேசன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தையை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் சிறுமி 5 மாத கர்ப்பமானார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் கவுசல்யா விசாரணை நடத்தி, லிங்கேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தார்.

இதேபோல, ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் மது (23). இவர் மதுக்கரை மரப்பாலம் பகுதியில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

அப்போது, அந்த பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பேரூர் ஆய்வாளர் பர்வீன்பானு, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மதுவை கைது செய்தனர். மேலும், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...