ஒமைக்ரான் எதிரொலி: 12 நாடுகளில் இருந்து கோவைக்கு வந்த 70 போ் தனிமைப்படுத்தி தீவிர கண்காணிப்பு..!

டெல்டா உட்பட முந்தைய கொரோனா நோய்த் தொற்று வகைகளைக் காட்டிலும் ஒமைக்ரான் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.


கோவை: கோவையில் தென் ஆப்பிரிக்கா உட்பட மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ள 12 நாடுகளில் இருந்து கோவைக்கு வந்த 70 போ் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உலகையே இரண்டு ஆண்டுகளாக அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்று பல்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து தற்போது ஒமைக்ரான் என்ற புதிய வகையாக உருவாகியுள்ளது.

டெல்டா உட்பட முந்தைய கொரோனா நோய்த் தொற்று வகைகளைக் காட்டிலும் ஒமைக்ரான் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல், போட்ஸ்வானா, சிங்கப்பூா், ஹாங்காங், இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் புதிய வகை ஒமைக்ரான் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மிகத் தீவிரமாக பரவி வரும் தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, இஸ்ரேல், ஹாங்காங் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வருபவா்களுக்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து வருபவா்களை 7 நாள்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், மேற்கண்ட நாடுகளில் இருந்து கடந்த 5 நாள்களில் கோவைக்கு வந்த 70 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் பி. அருணா கூறியதாவது:

தென் ஆப்பிரிக்கா உட்பட மத்திய அரசு அறிவித்துள்ள 12 நாடுகளில் இருந்து 70 போ் கோவை வந்துள்ளனர். இவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பில்லை. இருந்தும் 70 பேரையும் 7 நாள்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்று தொடர்பான அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவா்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறாா்களா என்று கண்காணிக்க உள்ளாட்சி நிா்வாகம், சுகாதாரத் துறை, வருவாய் மற்றும் காவல் துறையினா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...