மண் பரிசோதனை அடிப்படையில் உரம் வழங்கப்படும் - உலக மண் தினத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்..!

இந்நிகழ்ச்சியில், அரசின் திட்டங்கள், உயிர் உரங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயிர்களுக்கு நுண்ணூட்ட கலவை அளிப்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


கோவை: மண் பரிசோதனை அடிப்படையில் பயிர்களுக்கு உரமிட வேண்டும் என்று தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஷீலா பூசலட்சுமி தெரிவித்துள்ளார்.

வேளாண்மைத்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தென்னமநல்லூர் கிராமத்தில், உலக மண் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கிருஷ்ணவேணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், அரசின் திட்டங்கள், உயிர் உரங்கள், சிறுதானியங்கள் மற்றும் பயிர்களுக்கு நுண்ணூட்ட கலவை அளிப்பது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இது குறித்து தொண்டாமுத்தூர் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குனர் ஷீலா பூசலட்சுமி பேசுகையில், "மண் மாதிரிகளின், மண்வள அட்டை அடிப்படையில், பயிர்களுக்கு உரங்கள் இட்டு, மண் உவர் நிலமாவதை தடுத்து, விவசாயிகள் உற்பத்தியை பெருக்க வேண்டும்," என்றார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...