அழிந்து வரும் மண் வளத்தை மீட்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - உலக மண் தினத்தில் சத்குரு கோரிக்கை..!

மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக "கான்சியஸ் பிளானட்" என்னும் இயக்கத்தை சத்குரு விரைவில் தொடங்க இருக்கிறார்.


கோவை: அழிந்து வரும் நம் மண் வளத்தை மீட்டெடுக்க அனைத்து தேசங்களும் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உலக மண் தினமான நேற்று (டிச., 5) ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விவசாயம் செய்வதற்கு மண்ணில் குறைந்தபட்சம் 3 சதவீதமாவது கரிமப் பொருட்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , "நம் உடலிற்கு மூலமான உயிருள்ள இம்மண், முழு அழிவை நோக்கிப் போய் கொண்டிருக்கிறது.

இதனை மிகுந்த அவசரத்துடன் அணுகுவது, எல்லா தேசங்களும் நிறைவு செய்ய வேண்டிய மிக முக்கிய பொறுப்பாக இருக்கிறது. நாம் இதனை நிகழச் செய்வோம்" என்று கூறியுள்ளார்.

மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக 'கான்சியஸ் பிளானட்' என்னும் இயக்கத்தை சத்குரு விரைவில் தொடங்க இருக்கிறார்.



இதனிடையே, மண் வளத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் கூறியுள்ளதாவது :

தற்போது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தான் பெரிய பிரச்சனையாக விவாதிக்கப்படுகிறது. ஆனால், மண் வளம் இழந்தால், அது இதை விட மிகப்பெரும் பாதிப்புகளை உலகளவில் ஏற்படுத்தும்.

ஆகவே, நாம் நமது கவனத்தை மண் வளம் காப்பதை நோக்கி திருப்ப வேண்டும். மண்ணில் உள்ள பல்லுயிர்களைக் காப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு தனி மனிதர்களும் நாம் எத்தகைய ஆபத்தை எதிர்நோக்கி உள்ளோம் என்பது குறித்த விழிப்புணர்வைப் பெற வேண்டும்.

கார்பன் வெளியீட்டை குறைப்பதில் (Carbon sink) மண் மிக முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன் அதிகப்படியான தண்ணீரை சேமிக்கும் திறனைப் பெற்றுள்ள மண், அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாகவும் விளங்குகிறது. 36 முதல் 39 இன்ச வரை உள்ள மேல் மண்ணின் (Top soil) வளம் தான் பூமியில் உள்ள 87 சதவீத உயிர்களின் வாழ்விற்கு மூலமாக உள்ளது. நம் உடலே கூட இந்த மண்ணால் ஆனது தான். எனவே, மண் வளத்தை மேம்படுத்தாமல் நம் உடலும், மற்ற உயிர்களும் மேம்பட முடியாது.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தேர்தல் பிரச்சினைகளாக மாற வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிக அக்கறை செலுத்தும் அரசாங்கங்கள் தான் ஆட்சியில் அமர தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...