வருமான வரி தாக்கல் செய்ய 31 ஆம் தேதி கடைசி நாள்; விரைந்து தாக்கல் செய்ய அறிவுறுத்தல்.

இதுவரை தங்கள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாதவர்கள், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் வகையில், உடனடியாக வருமானவரி தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


கோவை: வருமான வரித்துறையின் புதிய இ-பைலிங் (e-filing) தளத்தில் ரூபாய் 3 கோடிக்கும் அதிகமான வருமான வரி ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 

இதுவரை தாக்கல் செய்யாதவர்கள் விரைந்து தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

2021 டிசம்பர் 3-ம் தேதி நிலவரப்படி, 3 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் புதிய இ-பைலிங் தளத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

ஒரு நாளைக்கு தாக்கலாகும் ஐடிஆர் கணக்குகளின் எண்ணிக்கை 4 லட்சம் ஆகும். வருமானவரி செலுத்த கடைசி நாள் டிசம்பர் 31 ஆம் தேதி, நெருங்கி வரும் நிலையில், நாளுக்கு நாள், வரி செலுத்திவரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

இதில், ஐடிஆர்1 -58.98% , ஐடிஆர்2-8%, ஐடிஆர்3-8.7%, ஐடிஆர்4-23.12%.நவம்பரில், 48% ஐடிஆர்கள் சரிபார்க்கப்பட்டு, 82.80 லட்சம் கணக்குகளுக்கு ரிபண்ட் தொகை அனுப்பப்பட்டுள்ளது. வரி செலுத்துவோர், தாமதமின்றி ரீபண்ட் பெற, தங்கள் வங்கி கணக்குடன் நிரந்தர கணக்கு எண்ணை இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

மேலும், தாமதமின்றி கணக்குகளை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டு, வரி செலுத்துவோரின் மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் மூலமாக வருமான வரித்துறை தகவல்களை பகிர்ந்து வருகிறது.

இதுவரை தங்கள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாதவர்கள், கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் வகையில், உடனடியாக வருமானவரி தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...