விளாங்குறிச்சி ரோட்டில் 100 வீடுகள் கொண்ட இந்து நகர் மற்றும் விஐபி நகர் குடியிருப்பு பகுதிகளில் 32 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைப்பு!

குடியிருப்போர் பங்களிப்புடன் நலச்சங்க நிர்வாகிகள் மேற்கொண்ட இந்த முயற்சியால் மொத்தம் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


கோவை: கோவை விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது இந்து நகர் மற்றும் விஐபி நகர் குடியிருப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.குற்றச் சம்பவங்கள் தடுப்பதில் மூன்றாவது கண் என்று சொல்லக்கூடிய சிசிடிவி கேமராக்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை உணர்ந்து இப்பகுதியிலுள்ள குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், குடியிருப்பு பகுதி வளாகத்தின் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதன் துவக்க விழா இன்று மாலை நடந்தது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ பி ஆர் ஜி அருண்குமார், சிசிடிவி கேமரா கண்காணிப்பு திரையை திறந்து வைத்தார். சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ கே ஆர் ஜெயராம், சிசிடிவி கேமரா கன்ட்ரோல் ரூம் அலுவலகம் மற்றும் கைபேசி இணைப்பு செயலியை துவக்கி வைத்தார்.



இந்து நகர் மற்றும் விஐபி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் ராமநாதன், துணைத் தலைவர் சூரியன், செயலாளர் வேணுகோபால், இணைச் செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு கூடுதல் நிதி மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்து வழங்கி வரும் 'Ammarun' பவுண்டரி நிர்வாக இயக்குனர் விஸ்வநாதனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

நூறு வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பு பகுதியில் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி குற்ற சம்பவங்களை தடுக்க ஒற்றுமையுடன் செயல்படும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளை சிறப்பு விருந்தினர்கள் வெகுவாக பாராட்டினர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...