பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்..!

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நான்கு வனச்சரக பகுதிகளிலும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நான்கு வனச்சரக பகுதிகளிலும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ளன. இதில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான், கரடி உள்ளிட்ட விலங்குகளும் ஏராளமான பறவை இனங்களும் உள்ளன.

பாதுகாக்கப்பட்ட இந்த வனத்தையும், அங்குள்ள வனவிலங்குகளையும் வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

இதில் ஆண்டுதோறும் புலிகள் மற்றும் அனைத்து விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு என தனித்தனியே கணக்கெடுப்புகள் நடத்தப்படும். வன விலங்குகள் மற்றும் பறவை இனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா அல்லது குறைகிறதா என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு உரிய நடவடிக்கைகளை எடுக்க இந்த கணக்கெடுப்பு உதவுகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான மழைக் காலத்திற்குப் பிந்தைய வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணி இன்று (5ம் தேதி) தொடங்கி வருகிற 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் தலைமையில், வனச்சரகர்களான மணிகண்டன், புகழேந்தி, காசிலிங்கம் ஆகியோர் மேற்பார்வையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் என மொத்தம் 240 பேர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.



இக்கணக்கெடுப்பில் ஈடுபடுவோருக்கான பயிற்சி வகுப்பு வால்பாறையை அடுத்த அட்ட கட்டியில் நடைபெற்றது. கணக்கெடுப்பு குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, டாப்சிலிப், மானாம்பள்ளி ஆகிய நான்கு வனச்சரகங்கள்32 பீட்டுகளாக பிரிக்கப்பட்டு அவற்றில் 64 நேர்கோட்டுப் பாதைகள் பிரிக்கப்பட்டு அந்த வழித்தடங்களில் கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். எச்சம், காலடி தடங்கள், நககீறல்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கணக்கெடுப்பு பணி நடைபெறும். இவ்வாறு தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...