கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து விலை ஏற்றம் - ஒரு கிலோ நாட்டுத்தக்காளி 114-ரூபாய்க்கு ஏலம்..!

தொடர் மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளிகள் செடியிலேயே அழுகியதால் தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதாகவும், மழை குறைந்து தக்காளி செடியில் நல்ல விளைச்சல் ஏற்பட்டால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் தக்காளி வரத்து குறைந்து தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காய்கறி சந்தைக்கு தொடர்ந்து தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை வரை 14 -கிலோ எடைகொண்ட நாட்டுத்தக்காளி ஆயிரம் ரூபாய் வியாபாரிகள் வியாபாரிகள் ஏலம் எடுத்தனர்.



ஆனால் இன்று கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் நடைபெற்ற தக்காளி ஏலத்தில் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி நாட்டுத்தக்காளி ஆயிரத்து 600 ரூபாய்க்கு,அதாவது ஒருகிலோ 114 ரூபாய்க்கு ஏலம் போனது, இதேபோல் 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ஆப்பிள்தக்காளி ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஏலம் போனது.

இதனால் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் என் எதிர்பார்க்கபடுகிறது.

தொடர் மழை காரணமாக கோவை, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் உள்ள தக்காளிச் செடிகள் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளிகள் செடியிலேயே அழுகியதால் தக்காளி வரத்து குறைந்து காணப்படுவதாகவும், மழை குறைந்து தக்காளி செடியில் நல்ல விளைச்சல் ஏற்பட்டால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...