கிணத்துக்கடவில் நடைபெற்ற சேலஞ்சர் டிராபி இறகுப்பந்து போட்டியில் கோவை அணி வெற்றி..!

கோவை ஸ்ரீ வர்ஷா அணியும், கிணத்துக்கடவு ஜோ ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் இறுதி போட்டியில் நுழைந்தது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18-க்கு 20-என்ற செட் கணக்கில் கோவை ஸ்ரீவர்ஷா இறகுப்பந்து அணி வெற்றி பெற்றது.


கோவை:கிணத்துக்கடவில் நடைபெற்ற சேலஞ்சர் டிராபி இறகுப்பந்து போட்டியில் கோவை அணி வெற்றி பெற்றது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவுசொலவம் பாளையம் பகுதியிலுள்ள ஜோ ஸ்போட்ஸ் அகடமி உள்விளையாட்டு அரங்கில் சேலஞ்சர் டிராபி தலைப்பில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது.



இந்த போட்டியில் கோவை,கிணத்துக்கடவு பகுதியில் சேர்ந்த 14-அணிகள் பங்கேற்றது.

விடிய விடிய நடைபெற்ற இந்த இறகுப்பந்து போட்டியில் கோவை ஸ்ரீ வர்ஷா அணியும், கிணத்துக்கடவு ஜோ ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் இறுதி போட்டியில் நுழைந்தது.

பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 18-க்கு 20-என்ற செட் கணக்கில் கோவை ஸ்ரீவர்ஷா இறகுப்பந்து அணி வெற்றி பெற்றது.



பின்னர் கிணத்துக்கடவு ஜோ ஸ்போர்ட்ஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் ஜோதி மற்றும் கோவை குழந்தை நல மருத்துவர் சேதுபதி ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசு கோப்பை வழங்கி பாராட்டினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...