ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கதறி அழும் வீடியோ: இருவர் கைது

சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூல் ஆலை விடுதியில் மேலாளர் ஒருவர் பணிபுரியும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை தாக்கியதில் அந்தப் பெண் கதறி அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


கோவை:மேலாளர் ஒருவர் பணிபுரியும் பெண் ஒருவரை தாக்கியதில் அந்தப் பெண் கதறி அழும் வீடியோ வைரலான நிலையில் இருவரை போலீசார் கைது செய்தனர்.

மேலாளர் ஒருவர் பணிபுரியும் பெண் ஒருவரை தாக்கியதில் அந்தப் பெண் கதறி அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு சமூக வலைத்தளங்களில் பல கண்டனங்கள் எழுந்த நிலையில், கோவை மாவட்ட காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த சம்பவம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூல் ஆலை விடுதியில் நடைபெற்றது தெரியவந்தது.

அந்த விடுதியில் பணிபுரிந்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 22-வயது இளம் பெண் வேலைக்கு வர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விடுதியின் காப்பாளர் அந்தப் பெண்ணை தாக்கி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பெரும் கண்டனங்கள் எழுந்த வந்த நிலையில், சரவணம்பட்டி காவல் துறையினர் அந்த விடுதியின் காப்பாளர் லதா மேலாளர் முத்தையா ஆகிய இருவரைக் கைது செய்து பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 4-பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...