கோவை அருகே 400-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்... பதுக்கி வைத்த 3-பேர் கைது..!

மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை அரைத்து விற்ற புகாரில் 3-பேர் பிடிபட்டனர். மேலும் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400-கிலோ ரேஷன் அரிசியையும், உணவு வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசியை அரைத்து விற்ற புகாரில் 3-பேர் பிடிபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ளது தாசம்பாளையம்.இப்பகுதியில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், போலீசாரிடம் இருந்து தப்பிக்க ரேஷன் அரிசி அரைத்து விற்கப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் ஹரிபிரகாஷ் உள்ளிட்டோர் தாசம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில், செந்தில்குமார் என்பவர் வீட்டிற்குள் மாவு அரவை இயந்திரம் இயக்கப்படும் சப்தம் கேட்டது. பின்னர் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



ரேஷன் அரிசி மாவு அரவை இயந்திரத்தில் அரைக்கப்பட்டு அங்குள்ள ஓட்டல் மற்றும் உணவகங்களுக்கு விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கோவை மாவடட்டம் கேரள மாநில எல்லையில் உள்ளதால் இந்த ரேஷன் அரிசி மாவு மூட்டைகள் அந்த மாநிலத்திற்கு கடத்தப்படுவதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து சாக்கு மூட்டைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு சுமார் 400 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் ரேஷன் அரிசியை கடத்த பயன்படுத்தப்பட்ட ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் மாவு அரைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தேவா, நவநீதன், லோகநாதன் ஆகியோரை பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...