ஜெயலலிதா நினைவு நாள்: கிணத்துக்கடவில் அதிமுகவினர் இன்று அஞ்சலி..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கிணத்துக்கடவில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு,கிணத்துக்கடவில் அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஜெ. ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று அதிமுகவினர் அனுசரித்தனர்.

இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு நகர அதிமுக சார்பில், ஜெயலலிதா ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையம் முன்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும், நடைபெறக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது என உறுதி ஏற்றனர்.

இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு நகரச் செயலாளர் மூர்த்தி, மலுமிச்சம்பட்டி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், முன்னாள் நகரச் செயலாளர் மனோகரன், லட்சுமணன், கண்ணம்மாள், சிங் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...