கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது..!

மேலும், போலீசார் நடத்திய சோதனையில் கணேஷ், மாணிக் சந்த், பான்மசாலா உள்ளிட்ட 68 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், 68 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, மொத்தமாக விற்பனை விற்பவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கடந்த மூன்று நாளில் மட்டும் கோவை மாநகரில் சுமார் 1500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள ஒரு செட்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, கணேஷ், மாணிக் சந்த், பான்மசாலா உள்ளிட்ட 68 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து, விற்பனை செய்த வின்சன்ட் ரோடு ஹவுசிங் யூனிட் சேர்ந்த முகமது ரபிக் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அப்பாஸ் என்பவரை தேடி வருகின்றனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...