போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drugs என்ற பேரில் நடத்திய அதிரடி சோதனையில் கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கோவை: கோவை மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தவரை கைது செய்தனர்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக DAD-Drive Against Drugs என்ற பேரில் மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லை பகுதியில் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் என்பவர் தலைமையில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் செல்வராஜ் மகன் ஆகாஷ் லோகேஸ்வரன் (21) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து, அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.