கோவையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த கூட்டுறவு துறை மூலம் தக்காளி கிலோ ரூ.62க்கு விற்பனை..!

மேலும், மக்களின் தேவைக்கேற்ப கொள்முதலை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் கூட்டுறவு துறையின் மூலம் 10 இடங்களில் தக்காளி ஒரு கிலோ ரூ.62க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் தொடரும் மழையின் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து உள்ளது.

இதன் காரணமாக விலை உயர்ந்து வருவதால், அனைத்து காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுப்படுத்த காய்கறிகள், வெளிச்சந்தையை விட குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக, டி.யு.சி.எஸ், சிந்தாமணி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களால், கொள்முதல் செய்யப்பட்டு கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகளில் கடந்த மாதம் 24ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவையில் உள்ள கூட்டுறவு துறை நடத்தும் சிந்தாமணி தலைமை அலுவலகம், கோவை மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிட வளாகம், சிந்தாமணி என்.எஸ்.ஆர் சாலை கிளை அலுவலகம், மலர் அங்காடி கட்டிட வளாகம் பூ மார்க்கெட், ஆவின் பால் விற்பனை அலுவலக வளாகம், தெலுங்கு பாளையம் கூட்டுறவு கடன் சங்க கட்டிட வளாகம், பாப்பநாயக்கன்பாளையம் கூட்டுறவு பண்டக வளாகம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய காய்கறி வளர்ப்போர் சங்கம், கோவை மாவட்ட உள்ளூர் திட்ட குழுமம் அலுவலகம், ஒண்டிபுதூர் நகர கூட்டுறவு கடன் சங்க வளாகம் ஆகிய 10 இடங்களில் ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.62க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், மக்களின் தேவைக்கேற்ப கொள்முதலை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவு துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...