கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் கூட்டம்..!!

உழவர் உற்பத்தியாளர் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.


கோவை: வேளாண்துறை மற்றும் வணிகத்துறை, கோயமுத்தூர் திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் கலந்துரையாடல் கூட்டம் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.



இந்த கலந்துரையாடலில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த அனைத்து உழவர் உற்பத்தியாளர் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இக்கூட்டத்தில் மூன்று பகுதியையும் சேர்ந்த நிர்வாகிகள் அவர் அவர் கோரிக்கைகளை முன்வைத்தனர்.



மேலும், உற்பத்தி செய்யும் ஆலைகளின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார நிலைமை குறித்து பேசப்பட்டது. மேலும், இதில் கோவையைச் சார்ந்த 8 நபர்களும், திருப்பூரைச் சார்ந்த 10 நபர்களும், ஈரோட்டைச் சார்ந்த 12 நபர்களும் கலந்து கொண்டனர்.



இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் தங்கள் கோரிகைகளையும், பிரச்சனைகளையும் கூறினர். மேலும், நிறுவனங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து, அவர் அவர் நிறுவனங்கள் குறித்து விளக்க உறையும் நிர்வாகிகளால் முன்வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை இயக்குனர் நடராஜன் கூறியதாவது;

கோவையில் 21 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது. வேளாண்மை விற்பனையால் இருமடங்கு உற்பத்தியால் மும்மடங்கு வருமானம் என்று இன்று செயல்பட்டு வருகின்றது. உலகத்தின் வர்த்தகத்திற்கு ஏற்ப உழவர்களை தயார்படுத்த வேண்டும் எனவும் உழவர்களை நவீன முறையை பயன்படுத்தி அதிக லாபம் அடைய வேண்டும் என்பதே இலக்கு என்று தெரிவித்தார்.

உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் விலைப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இன்று இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...