கோவையில் பாதுகாப்பான சாலைகள் வடிவமைப்பது குறித்து மாநகராட்சி என்ஜினீயர்களுக்கு ஜெர்மன் அமைப்பு மூலம் பயிற்சி அளிக்க திட்டம்..!

இந்த பயிற்சியில் ஒரு தெருவானது வாகன போக்குவரத்திற்கு மட்டுமின்றி நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பு தருவதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட உள்ளது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பான சாலைகளை வடிவமைப்பது குறித்து மாநகராட்சி என்ஜினீயர்களுக்கு ஜெர்மன் அமைப்பு மூலம் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் மூலம் கோவை, புவனேஸ்வர் மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் ஜெர்மனை சேர்ந்த அமைப்பான ஜெர்மன் வளர்ச்சி ஏஜென்சி மூலம் பாதுகாப்பான சாலைகள் வடிவமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில், கோவை மாநகராட்சியை சேர்ந்த என்ஜினீயர்களுக்கு ஜெர்மன் நாட்டை சேர்ந்த அமைப்பின் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு வார பயிற்சி அளிக்கப்பட்டது. அதே போல் இந்தாண்டும் ஒரு வார கால பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஜெர்மன் அமைப்பின் மூலம் பாதுகாப்பான சாலைகள் அமைப்பது, நடந்து செல்லும் பொதுமக்களுக்கு முக்கியத்துவம் அளித்து சாலை வடிவமைத்தல் செய்வது, சாலையோர வியாபாரிகள், முதியோர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பானதாக ஒரு தெரு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியில் ஒரு தெருவானது வாகன போக்குவரத்திற்கு மட்டுமின்றி நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பு தருவதன் முக்கியத்துவம் குறித்தும், நடைபாதைகள், தெருவிளக்குகள் அமைப்பது குறித்தும் விளக்கப்பட உள்ளது,’’ என்று தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...