கோவை மாநகராட்சியில் மின் மோட்டாரை பயன்படுத்தி குடிநீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு - மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை..!

கோவையில் குடிநீர் குழாயில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்களை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பில் மின் மோட்டாரை பொருத்தி குடிநீர் உறிஞ்சினால் நிரந்தரமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்கு சிறுவாணி அணை, பில்லூர் குடிநீர் திட்டம் போன்றவை மூலம் தண்ணீர் பெறப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கோவை மாநகர பகுதியில் விதிமீறி குடிநீர் எடுக்கப்படுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. குடிநீர் குழாயில் மின் மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுபவர்களை கண்டறிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்கள் குடிநீர் இணைப்பில் நேரடியாக மின் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது சட்ட விரோத செயல் ஆகும். மாநகராட்சி ஊழியர்கள் குடிநீர் விநியோகம் செய்யும் பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வின் போது, குடிநீர் இணைப்பில் சட்ட விரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பது தெரியவந்தால், நிரந்தரமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்," என்று தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...