கோவையில் தொடரும் கனமழை..! மழை பாதிப்புகளை சீர் செய்ய மாநகராட்சி சார்பில் 5 ஜேசிபி வாகனங்கள், மோட்டார் பம்புகள், சூப்பர் சக்கர் வாகனம் தயார்..!

மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு ஜேசிபி வாகனம் என 5 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் தொடரும் கனமழை காரணமாக அதன் பாதிப்புகளை சீர் செய்ய மாநகராட்சி சார்பாக 5 ஜேசிபி வாகனங்கள், சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள், சூப்பர் சக்கர் வாகனம் போன்றவைகள் தயார் நிலையில் உள்ளதாக மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாநகராட்சிக்குட்பட்ட 9 குளங்கள் நிரம்பியுள்ளன. மேலும் நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

மாநகராட்சிக்குட்பட்ட வீதிகள் பலவற்றிலும் குறிப்பாக ராஜவாய்க்கல் செல்லும் வீதிகளில் மழை பெய்தால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும் அவினாசி மேம்பாலம், லங்கா கார்னர், கிக்கானி ரயில்வே பாலம் என பல இடங்களிலும் மழை நீர் சூழ்ந்து விடுகின்றன.

இதுதவிர சாலைகளில் மரம் விழுதல், சாலை சேதமடைதல் போன்றவைகளும் நடக்கின்றன. எனவே தொடரும் மழையினால் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்ய தயார் நிலையில் 5 ஜேசிபி வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை மாநகராட்சியில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதில் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு ஜேசிபி வாகனம் என 5 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர சூப்பர் சக்கர் வாகனம், சக்தி வாய்ந்த மோட்டார் பம்புகள் போன்றவைகளும் தயார் நிலையில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...