தேர்வு முடிவுகளில் பலர் தோல்வி என்ற அறிவிப்பை தொடர்ந்து கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் தர்ணா

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் அரியர்ஸ் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளில் பல பேர் தோல்வி என பல்கலைக்கழகம் அறிவித்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இன்று கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் அரியர்ஸ் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளில் பல பேர் தோல்வி என பல்கலைக்கழகம் அறிவித்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் இன்று கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை தோட்டக்கலை உள்ளிட்ட 12 பாடப்பிரிவில் இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நேரடியாக 14 கல்லூரிகள் மற்றும் 19 உறுப்புக் கல்லூரிகள் என 44 கல்லூரிகளில் வேளாண்மை படிப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் தேர்வு எழுதிய மாணவர்களில் பல மாணவர்கள் தோல்வி அடைந்ததாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தேர்வை ஆன்லைன் மூலமாகவும், செய்முறை தேர்வை நேரடியாகவும் மாணவர்கள் எழுதி இருக்கும் நிலையில், தேர்வு முடிவுகளில் எந்த பாடத்திலும் மதிப்பெண் குறிப்பிடப்படாமல், தோல்வி என்று பெரும்பாலான மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டி, இதற்கு உரிய தீர்வை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



இதனால், மனமுடைந்த மாணவர்கள் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தை கலைத்தனர்.



தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்திற்குள் துணைவேந்தர் அலுவலகத்திற்கு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.



இதற்கிடையே, பெரும்பாலான மாணவர்கள் மதிப்பெண் குறிப்பிடப்படாமல் தோல்வி என அறிவிக்கப்பட்டதை வாபஸ் பெற்று, முறையான தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



தொடர்ந்து, பல்கலைக்கழக தேர்வு துறை அதிகாரிகளோடு மாணவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...