பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை..!

வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் மற்றும் பயணிகள் உடைமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.


கோவை: பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் இன்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

பாபர் மசூதி இடிப்பு தினம் டிசம்பர் 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.



இதனையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப் படை போலீசார் இணைந்து ரயில் நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.



மேலும், பார்சல் அலுவலகங்களில் எந்த மாதிரியான பொருட்கள் அனுப்பப் படுகிறது என்பது குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, கோவை வந்த தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் ஒவ்வொரு பெட்டியாக ஏறி சோதனை நடத்தினர்.



வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையம் முழுவதும் மற்றும் பயணிகள் உடைமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.



பாபர் மசூதி தினம் நெருங்குவதால் முன்னெச்சரிக்கையாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் நோக்கில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...