வால்பாறையில் தொடர்ந்து அதிகரித்து வரும் காட்டு யானைகளின் நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்..!

காட்டு யானைகளை விரட்ட போதுமான பணியாளர்கள் இல்லை என்பதால் யானைகளை விரட்ட தோட்டம் நிர்வாகம் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது. யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளை சேதப்படுத்தி வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



இந்நிலையில், வால்பாறை அருகே நல்லமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சத்துணவு மையத்தை 13 காட்டு யானைகள் ஜன்னல், கதவு போன்றவற்றை உடைத்து, உள்ளே இருந்த சுமார் 250 கிலோ அரிசி மூட்டைகள், பருப்பு சர்க்கரையை சாப்பிட்டு சத்துணவு மையத்தை சேதப்படுத்தியது.



அதேபோல், ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து அங்கு உள்ள சத்துணவு மையத்தை ஜன்னல்களை உடைத்து அங்கிருந்த அரிசி பருப்புகளை சாப்பிட்டும் யானைகள் சேதப்படுத்தியது.

இந்த நிலையில், இரவு நேரங்களில் யானைகளை விரட்டுவதற்கு போதுமான ஆட்கள் இல்லாததால் யானைகளை விரட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதாக பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், வால்பாறையில் சுமார் 62 எஸ்டேட் உள்ளன. 6 பெரிய நிறுவனங்கள் உள்ளன. இரவு நேரங்களில் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வந்தால் வனத்துறையினரிடம் இணைந்து எஸ்டேட் நிர்வாகம் வாகனம் வழங்கி தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பி யானைகளை விரட்டினர்.

தற்போது வனத்துறை மட்டுமே குறைந்த பணியாளர்களை வைத்து யானைகளை விரட்டி வருகின்றனர். பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் யானைகளை விரட்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

எனவே, எஸ்டேட் நிர்வாகமும் வனத்துறையினரும் இணைந்து ஒவ்வொரு எஸ்டேட் பகுதிக்குள் வரும் யானைகளை விரட்டுவதற்கு, எஸ்டேட் தொழிலாளர்கள், எஸ்டேட் வாகனம், மற்றும் வனத்துறையினர் இணைந்து யானைகளை விரட்ட முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...