விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு..!

விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க, காவல் ஆணையர் பிரதீப் குமார், "EEE" திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டதன் பேரில், மாநகர காவல்துறையின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


கோவை: விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க, காவல் ஆணையர் பிரதீப் குமார், "EEE" திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டதன் பேரில், மாநகர காவல்துறையின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கோவை மாநகர காவல் விபத்தில்லா கோவை மாநகரை உருவாக்க, காவல் ஆணையர் பிரதீப் குமார், "EEE"(Enforcement, Education, Engineering) திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிட்டதன் பேரில், கோவை மாநகர காவல்துறையின் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, காவல் ஆணையர், முக்கிய சந்திப்பு பகுதிகளைத் தேர்ந்தெடுத்து "போக்குவரத்து விதிமீறல் இல்லா சந்திப்பு" (Zero violation Junction)என அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார்.

கோவை மாநகர போக்குவரத்துக் காவல் துணை ஆணையர் S.R.செந்தில்குமார், தலைமையிலான போக்குவரத்து காவல்துறையினர், சிந்தாமணி சந்திப்பு பகுதியைப் போக்குவரத்து விதிமீறல் இல்லா சந்திப்பு" (Zero violation Junction) எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.



இந்நிகழ்வில், காவல் ஆணையர் பிரதீப் குமார், கலந்துகொண்டு விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.



சிந்தாமணி சந்திப்புப் பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சீட் பெல்ட் அணியாமல், இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்து கொண்டு தலைக்கவசம் அணியாதவர்கள், சிக்னல்களில் எல்லைக் கோட்டை தாண்டி நிறுத்தும் வாகன ஓட்டிகள், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் செய்தவர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டியவர்கள் என பல்வேறு விதி மீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு, வாகன விபத்து எவ்வாறு நடைபெறுகிறது என்பது பற்றியும் அவ்வாறு வாகன விபத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கிக் கூறினார்.



அதனைத் தொடர்ந்து அவர்களுக்குச் சாலை விதிகள் பற்றிய துண்டுப்பிரசுரம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி NSS மாணவர்கள் மூலம் துண்டுப்பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டம் மாநகர் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் ஏற்படுத்தப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...