பெட்ரோலில் தண்ணீர் கலப்படமா? திருப்பூரில் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்ட பொதுமக்கள்..!

திருப்பூரில் பெட்ரோல் பங்கில் பெட்ரோலில் தண்ணீர் கலந்து இருப்பதாக கூறி வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதம் செய்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: திருப்பூரில் தண்ணீர் கலந்த பெட்ரோல் வாகனங்களில் நிரப்பட்டதாக கூறி, பெட்ரோல் பங்கை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.



திருப்பூர் - போயம்பாளையம் பிரிவில், மோகன் என்பவர் பார்வதி ஏஜன்சீஸ் என்ற பெயரில் பாரத் பெட்ரோலிய நிறுவன பெட்ரோல் பங்கை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த பெட்ரோல் பங்கில், இரு சக்கர வாகனங்களில் பெட்ரோல் நிரப்பியவர்கள், பெட்ரோல் தண்ணீர் கலந்து வருவதாகப் புகார் தெரிவித்து பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டனர்.

மேலும் தண்ணீர் கலந்த பெட்ரோலை இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நிரப்பியதால், வாகனங்கள் பழுதடைந்துவிட்டதாகவும் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து வாகனங்களில் பெட்ரோல் நிரப்பியவர்கள் பெட்ரோல் பங்கில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தினர். பொதுமக்கள் கூறுகையில், அனைத்து வாகனங்களிலும் தண்ணீர் கலந்த பெட்ரோலை நிரப்பியதால் வாகனங்கள் அனைத்தும் பழுதடைந்துவிட்டதாகவும், பெட்ரோல் பங்கின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கூறுகையில், பெட்ரோல் சேமிக்கும் டேங்கில், மழைநீர் புகுந்ததால் பெட்ரோலில் தண்ணீர் கலந்துவிட்டதாகவும், தண்ணீர் கலந்தது தெரிய தாமதமானதால், இந்த தவறு நிகழ்ந்துவிட்டதாகவும், பழுதடைந்த வாகனங்கள் சரி செய்து தருவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...