வால்பாறையில் கல்லாறு குடி மலைவாழ் மக்களுக்குப் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் போடப்பட்ட குடிசைகள் வனத்துறையினரால் அகற்றப்பட்டதால் மலைவாழ் மக்களுக்கும் வனத்துறையினருக்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை: வால்பாறையில் கல்லாறு குடி மலைவாழ் மக்களுக்குப் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் போடப்பட்ட குடிசைகள் வனத்துறையினரால் அகற்றப்பட்டதால் மலைவாழ் மக்களுக்கும் வனத்துறையினருக்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு உட்பட்ட வால்பாறையில் கல்லாறு கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அதி கனமழை பெய்தது. கல்லாறு கிராமம் மழையால் பாதிக்கப்பட்டு அங்கு வாழ முடியாமல் அங்குல உள்ள மக்கள் 23-குடும்பம் தெப்பக்குளமேடு பகுதியில் வாழ்வதற்கு மாற்று இடம் வழங்கப் பல போராட்டங்கள் நடத்தினார்.
பாரம்பரியமாக வசித்து வரும் இடத்தில் பட்டா வழங்க வேண்டும் என்று பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தினர். தமிழக அரசு பழங்குடியின மக்கள் அவர்கள் கேட்ட இடத்தில் பட்டா வழங்க அரசு முடிவு செய்தது.
இதனைத்தொடர்ந்து கடந்த மாதம் வால்பாறையில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் கல்லாறுகுடி பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் 21-குடும்பங்களுக்குத் தெப்பக்குளம் மேடு இடத்தில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கினார்.

இந்நிலையில் பட்டா வழங்கப்பட்ட இடத்தில் வருவாய்த்துறையினர் நில அளவை செய்து கொடுத்த வந்த நிலையில், அப்பகுதியில் கள்ளாறுகுடி மக்கள் குடிசை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் வனத்துறையினர் அங்குச் சென்று குடிசைகளைப் பிரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு வழங்கிய பட்டா இடத்தில் தான் நாங்கள் குடிசை அமைத்தோம் அப்புறம் ஏன் குடிசைகளை அகற்றினார்கள் என்று வனத்துறைக்கும் மலைவாழ் மக்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு வழங்கப்பட்ட இடத்தைவிட்டு வேறு இடத்தில் குடியமர்த்த அனுமதி இல்லை என்று தான் குடிசைகள் அகற்ற வேண்டுமென வனத்துறையினர் மலைவாழ் மக்களிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, மலைவாழ் மக்கள் கேட்ட இடத்தில் பட்டா வழங்கப்பட்டது என்றும், அதற்கான நில அளவையும் செய்த நிலையில் பட்டா வழங்கப்பட்ட இடத்தைவிட்டு வேறு இடத்தில் குடிசை அமைத்ததால் அந்த குடிசைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும், மேலும் பட்டா வழங்கிய இடத்தில் குடிசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் வன காப்பக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தற்போது ஆதிவாசி பழங்குடி மக்கள் அமைத்த குடிசைகளை பிரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.