கோவையில் தனியார் நிறுவனம் சார்பில் அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கல்..!

கோவையில் தனியார் நிறுவனம் சார்பில் அரசு பள்ளியில் பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள 352-மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகையாக 17,60,000-ரூபாய்கான காசோலையை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.


கோவை: கோவையில் தனியார் நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழ்மை நிலையில் உள்ள 352 மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகையாக 17,60,000 ரூபாய்கான காசோலையை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

கேரள மாநிலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனியார் கோல்டு நிறுவனம் (மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்) இயங்கி வருகின்றது. இதன் கோவை கிளை சார்பில் கோவை ஆர்எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், முதற்கட்டமாக, கோவை மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவிகள் 352 பேருக்கு, 17,60,000 க்கான காசோலைகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.



தொடர்ந்து, 1200 மாணவிகளுக்கு 60 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட உள்ளது.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...