கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை தினம் கொண்டாட்டம்..!

நாட்டுக்காக அர்ப்பணிக்கும் ராணுவத்தின் முதல் படியான தேசிய மாணவர் படையைக் கவுரவிக்கும் விதமாக இன்று கோவை கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை தினம் இன்று கொண்டாடப்பட்டது.


கோவை: நாட்டுக்காக அர்ப்பணிக்கும் ராணுவத்தின் முதல் படியான தேசிய மாணவர் படையைக் கவுரவிக்கும் விதமாக இன்று கோவை கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படை தினம் இன்று கொண்டாடப்பட்டது.

முன்னதாக சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வந்த கோவை ஆபீசர் கமெண்டிங் லெப்ட் கர்னல் மணி சர்மாவுக்கு தேசிய மாணவர் படை மாணவ- மாணவிகள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவோம் என உறுதிமொழியை ஏற்றுத் தேசிய மாணவர் படை தின விழாவைத் தொடங்கினர்.

ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் ராஜராம், கல்லூரி முதல்வர் டாக்டர் சுதாமோகன்ராம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கல்லூரியின் டீன் கருப்புசாமி வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஆபீசர் கமெண்டிங் லெப்ட் கர்னல் மணிசர்மா சிறப்புரையாற்றினார். இதையடுத்து தேசிய மாணவர் படை மாணவ -மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கோவை பகுதியைச் சேர்ந்த பல்வேறு கல்லூரிகளின் தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகளும் கமண்டோக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...