மாவட்டத்தில் நாள்தோறும் 2000- பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், கட்டாயம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதுவரை மாவட்டத்தில் யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தென்படவில்லை என தெரிவித்தார்.
நீலகிரி: நாள்தோறும் 2000- பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், கட்டாயம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
வெளிமாநிலங்களிலிருந்து நீலகிரிக்குச் சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி எல்லையில் மிக தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள்.
மாவட்ட எல்லைப்பகுதியான கீழ்நாடுகாணி, கக்கநள்ளா, தாளூர் உட்பட 13-சோதனைச் சாவடிகளில் வருவாய்த்துறையினர், மருத்துவக் குழு, சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு செய்கின்றனர். கொரோனா தொற்று அறிகுறியுடன் வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் பகுதியாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதிக்கு வந்த ஒரு சிலருக்கு ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி சிலருக்கு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரக்கூடிய எல்லையில் அமைந்துள்ள கீழ்நாடுகாணி, தாளூர், கக்கநள்ளா உட்பட 13-சோதனை சாவடிகளில் சிறப்பு கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவில் வருவாய்த்துறையினர், சுகாதாரப் பணியாளர, ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், காவலர்கள் சுழற்சி முறையில் 24-மணி நேரமும் மிகத் தீவிரமாக வெளிமாநிலங்களிலிருந்து வரும் பயணிகளைக் கண்காணிப்பார்கள்.
நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நோய் அறிகுறிகளுடன் வந்தால் அவர்களை திருப்பி அனுப்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் நோய் அறிகுறிகளுடன் வந்தால் அவர்கள் கட்டாயம் எட்டு நாட்கள் வீட்டு தனிமையில் வைக்கப்படுவார்கள் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டி அளித்த அவர் நீலகிரி மாவட்டத்தில் நாள்தோறும் 2000- பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர் கட்டாயம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதுவரை நீலகிரி மாவட்டத்தில் யாருக்கும் ஓமிக்ரான் வைரஸ் தொற்று தென்படவில்லை என தெரிவித்தார்.