தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மண்டலத்தின் கீழ் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு உதவ சிறப்பு சரிபார்ப்பு நடவடிக்கை..!

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி முதன்மை ஆணையரின் ஆளுகைக்கு உட்பட்ட, கோவை, குன்னூர், பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் சிறப்பு சரிபார்ப்பு நடைபெறும்.


கோவை: மத்திய சரக்கு மற்றும் சேவை வரி முதன்மை ஆணையரின் ஆளுகைக்கு உட்பட்ட, கோவை, குன்னூர், பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் சிறப்பு சரிபார்ப்பு நடைபெறும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மண்டலத்தின் கீழ் உள்ள கோயம்புத்தூர் உள்ளிட்ட மத்திய சரக்கு மற்றும் சேவை வரி அலுவலகங்களில் 06.12.2021 முதல் 17.12.2021 வரை சரிபார்ப்பு பட்டியலில் இருக்கும் ஏற்றுமதியாளர்கள் மற்றும் அவர்களின் சப்ளையர்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள சரிபார்ப்புகளைத் துரிதப்படுத்தி நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி முதன்மை ஆணையரின் ஆளுகைக்கு உட்பட்ட, கோயம்புத்தூர், குன்னூர், பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்திலும் இந்த சிறப்பு சரிபார்ப்பு நடைபெறும்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் ஏற்றுமதிப் பலன்களை சில ஏற்றுமதியாளர்கள் தவறாகப் பயன்படுத்துவதற்கான ஆபத்தைத் தடுக்கவே இந்தச் சரிபார்ப்புகள் ஏற்படுத்தப்பட்டாலும், நேர்மையான ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு மத்திய மறைமுக வரிகள் ஆணையத்தின் கீழ் செயல்படும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறை இந்த சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது.

ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க அரசு வழங்கும் ரீஃபண்ட் தொகையைத் தவறாகப் பெற்றிருக்கலாம் என்று வகைப்படுத்தப்பட்ட சில ஏற்றுமதியாளர்கள், சரிபார்க்கப்பட வேண்டிய பட்டியலில் வைக்கப்படுகின்றனர். இதன் விளைவாக, அவர்களின் ரீஃபண்டு தொகை நிறுத்தி வைக்கப்படுவதோடு, ஏற்றுமதிக்குச் செல்லும் அவர்களின் சரக்குகள் பல்வேறு சுங்க அமைப்புகளில் 100% ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

இதனால் ஏற்படும் சிரமங்களையும், ஏற்றுமதியாளர்கள் சரியான நேரத்தில் பணத்தைத் திரும்பப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களையும் ஏற்றுமதியாளர்களின் பல்வேறு கூட்டமைப்புக்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மண்டலத்தின் தலைமை ஆணையரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும், சரிபார்ப்பு நடவடிக்கையினால் ஏற்றுமதியாளர்களுக்கு ரீஃபண்ட் பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்யவும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மண்டலத்தின் தலைமை ஆணையர், மண்டலத்தின் கீழ் வரும் ஆணையர்கள் அனைவரும் டிசம்பர் 6-முதல் 17-ஆம் தேதி வரை 2- வாரங்களுக்கு இந்தச் சரிபார்க்கும் சிறப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

நிலுவையில் உள்ள அனைத்து சரிபார்ப்புகளையும் டிசம்பர் பதினேழுக்குள் முடிக்கவும் தலைமை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஏற்றுமதியாளர்களுக்கு விரைவாக ரீஃபண்ட் தொகை கிடைக்கவும், அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவும் கோயம்புத்தூர் மத்திய கலால் மற்றும் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி முதன்மை ஆணையரின் ஆளுகைக்கு உட்பட்ட அலுவலகங்களில் இந்த சிறப்புச் சரிபார்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, சரிபார்ப்பு பட்டியலில் உள்ள அனைத்து ஏற்றுமதியாளர்களும் இந்த சிறப்பு நடவடிக்கையைக் கவனத்தில் கொண்டு, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து நிலுவையில் உள்ள சரிபார்ப்புகளை முடித்துக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...