கோவையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்.!!

ஏலம் எடுக்க விரும்புவோர் 07.12.2021 ஆம் தேதி மாலை 05.00 மணி வரை அந்தந்த மதுவிலக்கு அமல்பிரிவுகள் மற்றும் காவல் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களைப் பார்வையிட்டுக் கொள்ளலாம்.


கோவை: குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பொதுமக்களுக்குத் தெரிவிப்பது:-

கோவை மாவட்ட காவல் துறையினரால் மதுவிலக்கு குற்றங்களில் கைப்பற்றப்பட்டு அரசுக்குப் பறிமுதல் செய்யப்பட்ட 5-ஆறு சக்கர வாகனங்கள், 17-நான்கு சக்கர வாகனங்கள், 2-மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 133-இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 157-வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 08.12.2021 ஆம் தேதி காலை 10.00 மணிக்குக் கோவை அவினாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.

ஏலத்தில் விடப்படும் வாகனங்கள் பொள்ளாச்சி வெங்கடேசா காலணியில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், கோவில்பாளையம் தேவம்பாளையம் பாலாஜி நகரிலுள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், சூலூர், மதுக்கரை,க.க.சாவடி, செட்டி பாளையம், தொண்டாமுத்தூர், அன்னூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி தாலுக்கா, கோமங்கலம், நெகமம் மற்றும் வால்பாறை காவல் நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஏலம் எடுக்க விரும்புவோர் 07.12.2021 ஆம் தேதி மாலை 05.00 மணி வரை அந்தந்த மதுவிலக்கு அமல்பிரிவுகள் மற்றும் காவல் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களைப் பார்வையிட்டுக் கொள்ளலாம்.

வாகனங்கள் ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி (GST) முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாகச் செலுத்தி வாகனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...