தை 1-ம் தேதியை புத்தாண்டு தினமாக அறிவிக்கும் அரசின் முடிவு -இந்து முன்னணி கண்டனம்..!

சித்திரை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டாகத் தமிழர்கள் கொண்டாடி வரும் வேளையில் திமுக அரசு தை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருக்கும் செயல் கண்டிக்கத்தக்கது என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.



கோவை: சித்திரை ஒன்றாம் தேதி தமிழ் புத்தாண்டாகத் தமிழர்கள் கொண்டாடி வரும் வேளையில் திமுக அரசு தை ஒன்றாம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருக்கும் செயல் கண்டிக்கத்தக்கது.

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:-

வெள்ள பாதிப்புகளால் மக்கள் அவதிக்குள்ளாகி நிவாரணத்திற்கு வழியின்றி தவிக்கும் வேளையில், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மொழிவெறி, இனவெறி அரசியலை திமுக மீண்டும் கையில் எடுத்திருப்பது கண்டிக்க தக்கது.

கடந்த 2008-ல் கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசு இதேபோன்று தை 1-ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது. இதைத் தமிழ் அறிஞர்கள், சமயப் பெரியோர்கள், கண்டித்தார்கள்.

அறிவியல் பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் சித்திரை ஒன்றாம் தேதி தான், தமிழ் புத்தாண்டு என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தனர். திமுகவின் அறிவிப்பை மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதைக் கருத்தில் எடுத்துக் கொண்ட ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2011-ஆம் ஆண்டு தை 1 புத்தாண்டு என்பதை விலக்கிக் கொண்டு சித்திரை முதல் நாள் புத்தாண்டு என்று அறிவித்தது.

தற்போதைய அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகின்ற புத்தாண்டின் மரபிற்குப் பங்கம் விளைவித்து தமிழர்களின் மாண்பைச் சீர்குலைக்கலாமா? புத்தாண்டு என்பது ஒரு நாள் விழாவாகும், ஆனால் தை திருநாள் என்பது அப்படி அல்ல, தொன்மையான காலம் தொட்டே இதை போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் விழாவாகக் கொண்டாடி வருகிறோம்.

திருவள்ளுவர், தை 1 போன்றவற்றுக்கு மதச்சார்பற்ற தன்மைகள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகிறது. திருவள்ளுவர் பிறந்தநாள் ஆண்டுதோறும் வைகாசி மாசம் அனுஷ நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டு வந்தது.

இதே போன்று நாயன்மார்கள், ஆழ்வார்களுக்குக் கொண்டாடப்படும் விழாக்களானது தமிழ் மாதத்தையும் நட்சத்திரத்தையும் மையமாகக் கொண்டே நடத்தப்பட்டு வருகிறது. இந்த மரபைபின்பற்றிதான் ராஜராஜ சோழனுக்கு ஐப்பசி மாதத்தில் சதயவிழா நடத்தப்பட்டு வருகிறது.

பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மாதங்களின் அடிப்படையில் கொண்டாடி வந்த திருவள்ளுவரின் பிறந்த நாளானது திராவிட கொள்கை வாதிகளால் ஆங்கில தேதியான ஜீன் இரண்டாம் தேதிக்கு 1966ல் மதமாற்றம் செய்யப்பட்டது. பிறகு கருணாநிதி ஆட்சிக்கு வந்த 1970ல், தை 2-ஆம் தேதியை திருவள்ளுவர் தினமாக அறிவிக்கப்பட்டது.

திருவள்ளுவர் பிறந்தநாளை மோசடியாக மாற்றி அமைத்தது போல இந்துக்கள் மட்டுமே கொண்டாடும் தைப்பொங்கலுக்குப் புத்தாண்டு போர்வை போர்த்தி மதச்சார்பற்ற தன்மையை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

1921-ல் பச்சையப்பா கல்லூரியில் மறைமலையடிகள் தலைமையில் தமிழறிஞர்கள் கூடியதாகவும், அங்கு தமிழ் புத்தாண்டு தை 1 என்று தீர்மானித்ததாகவும் பொய்யைப் பரப்புரை செய்து வருகின்றனர்.

தை 1-ம் தேதி தமிழ் புத்தாண்டு என்று இலக்கியங்கள், சரித்திரங்கள், தொன்மையான கல்வெட்டுகள் இவற்றில் ஒன்றில் கூட கூறப்படாத நிலையில், தமிழறிஞர்களால் எவ்வாறு அறிவியல் பூர்வமாக அறிவிக்க முடியும்.

தை 1-இல் தான் திருவள்ளுவர் தினமும், புத்தாண்டு தினமும் கொண்ட படவேண்டும் என்று 1921-ல் தமிழ் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தால், 1935ஆம் ஆண்டு இதே பச்சையப்பா கல்லூரியில் மறைமலையடிகள் தலைமையில், தமிழ் அறிஞர்கள் வைகாசி மாசம் அனுஷ நட்சத்திரத்தில் திருவள்ளுவர் தினத்தை ஏன் கொண்ட வேண்டும் என்னும் கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலினின் பதில் அளிக்க வேண்டும்.

தை திருநாள், தமிழர் திருநாள் மட்டுமே என்றால் இதே திருநாளை ஆந்திரம், கர்நாடகம், குஜராத், பஞ்சாப், மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலத்தவர்கள் பல்வேறு பெயர்களில் எதன் அடிப்படையில் கொண்டாடுகின்றனர் என்பதை கழித்தார்களால் விளக்க முடியுமா? இந்துக்கள் வானவியலின் நிகழ்வுகளை அறிவியல் பூர்வமாகக் கணித்து பஞ்சாங்கத்தை ஏற்படுத்தினார்கள், சூரியனை மையமாக வைத்து காலத்தை வினாடி, நாழிகை, மணி, நாள், வாரம், மாதம், ருது, அயனம்,ஆண்டு, யுகம், மன்வந்திரம், கல்பம், என்று கணக்கிட்டு தற்போது கலியுகாதி 5123 ஆம் ஆண்டு நடைபெறுகிறது.

இதை மாய்மாலம் செய்யும் விதமாக 1971ஆம் ஆண்டில் திருவள்ளுவர் பிறந்ததை கணக்கிட்டு தமிழர்களின் ஆண்டு 2002 என்று சுருக்கப்பட்டு திமுகவின் ஆட்சியில் அரசிதழ் வெளியிடப்பட்டது. இதனால் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழர்கள் கடைப்பிடித்து வந்த காலக் கணக்கு மோசடி செய்யப்பட்டது.

கடந்த ஐம்பது ஆண்டுகளாக எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், தைத் திருநாளையும், திருவள்ளுவரையும் குறிவைத்து திமுக செயல்படுவதைப் பார்க்கும்போது இதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் அடங்கியுள்ளதை அறியமுடிகிறது. மதமாற்றச் சக்திகளுக்குத் துணை போகும் திமுகவின் செயல்பாட்டை இந்தமுன்னணி கண்டிப்பதுடன், இதன்பின் விளைவுகள் அபாயகரமாக மாறிவிடும் என்றும் இந்து முன்னணி எச்சரிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...