பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் மனு..!

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை சரக கல்லாறு குடி மலைவாழ் மக்களின் குடிசைகளை அப்புறப்படுத்திய வனத்துறையினரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் மனு அளித்தனர்.


பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை சரக கல்லாறு குடி மலைவாழ் மக்களின் குடிசைகளை அப்புறப்படுத்திய வனத்துறையினரின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் மனு அளித்தனர்.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் வால்பாறை அடுத்த கல்லாறு குடி பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் தங்களுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதை ஒட்டி சமீபத்தில் அவர்களுக்கு வனப்பகுதியில் வீட்டு மனை ஒதுக்கப்பட்டது கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் மூங்கில் மற்றும் தென்னங்கீற்று களைக் கொண்டு குடிசைகளை அமைத்தனர்.

இந்நிலையில், இன்று காலை அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் எவ்வித முன்னறிவிப்புமின்றி மலைவாழ் மக்கள் அமைத்திருந்த குடிசைகளை அப்புறப்படுத்தினர். இதனால் அதிர்ச்சியுற்ற மலைவாழ் மக்கள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத வனத்துறையினர் வலுக்கட்டாயமாக அப்பகுதியிலிருந்து மக்கள் மக்களை வெளியேற்றி அப்புறப்படுத்தினர்.



இந்நிலையில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் அத்துமீறி நடந்துகொண்ட வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அப்புறப்படுத்திய குடிசைக்கு மாற்று ஏற்பாடாக மீண்டும் அதே இடத்தில் குடிசைகளை அமைக்க ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சம்பவம் காரணமாக நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...