திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்..!

கொடுத்த பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றும் உறவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் பரபரப்பு நிலவியது.


திருப்பூர்: கொடுத்த பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றும் உறவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவரால் பரபரப்பு நிலவியது.

திருப்பூர் ஐய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வரதன் (35) இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. வரதன் கோவில்வழி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார்.

இதனிடையே, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரதனின் உறவினரான முத்துசாமி என்பவர் தொழில் துவங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதையடுத்து, தனது குழந்தைகளின் நகையை வங்கியில் அடமானம் வைத்து வரதன் ஒரு லட்சம் ரூபாயை முத்துசாமிக்குக் கொடுத்துள்ளார்.

பணத்தை வாங்கிக் கொண்ட முத்துசாமி அதன்பிறகு வங்கியில் ஒரு மாதம் கூட தவணை தொகையைக் கட்டவில்லை. இதுகுறித்து, வரதன் முத்துச்சாமி இடம் கேட்டபோது, தான் பணமே வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் கொடு தன்னை எதுவும் செய்யமுடியாது என தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தன்னை தாக்கியதாக வரதனின் மீது முத்துச்சாமி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனால், மிகுந்த மன வேதனை அடைந்த வரதன் தனது மனைவி சத்யாவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். தான் மறைத்து வைத்திருந்த டீசல் கேனை எடுத்து மேலே ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.



ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அவரிடம் இருந்து டீசல் கேனை பிடுங்கி விசாரணை நடத்தினர்.



பின்னர், இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...