கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: கால்நடைத்துறை அதிகாரிகள் முகாம் அமைக்க கோரிக்கை..!

கேரளாவிலிருந்து பறவைக்காய்ச்சல் தமிழகத்திற்குப் பரவும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் எடுத்து எல்லைப்பகுதிகளில் முகாம்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி பொள்ளாச்சி வழியாகக் கேரளா செல்லும் எல்லைகளில் கால்நடைத் துறை அதிகாரிகள் முகாம் அமைக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள பொள்ளாச்சி வழியாகக் கேரளாவுக்குச் செல்ல கோபாலபுரம், மீனாட்சி புரம் நடுப்புணி உள்ளிட்ட வழித்தடங்கள் உள்ளன. இந்த வழித்தடம் வழியாகக் காய்கறிகள், கறிக்கோழிகள், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு வியாபாரிகள் கொண்டு செல்கின்றனர்.

குறிப்பாக நாமக்கல் மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து, கறிக்கோழிகள் கேரளாவுக்கு அதிகளவில் கொண்டு சொல்லப்படுகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவை காய்ச்சல் காரணமாக, பல ஆயிரக்கணக்கான வாத்துகள் உயிரிழந்துள்ளன.

தமிழக கேரள எல்லைப் பகுதியான பொள்ளாச்சி வழியாகக் கால்நடை போக்குவரத்து அதிகளவில் இருப்பதால், தமிழகத்திலும் பறவைக்காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது. எனவே கோவை மாவட்டத்தில் குறிப்பாகப் பொள்ளாச்சி வழியாகக் கேரளா செல்லும் எல்லைப்பகுதிகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், முகாம்கள் அமைக்கப்பட்டு கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்குக் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், கறிக்கோழிகள் கொண்டு செல்லும் முக்கிய வழித்தடமாக நடுப்புணி பகுதியில் இதுவரை கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் முகாம் அமைக்கப்படாமல் உள்ளது. கேரளாவிலிருந்து பறவைக்காய்ச்சல் தமிழகத்திற்குப் பரவும் அபாயம் உள்ளதால், மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் எடுத்து எல்லைப்பகுதிகளில் முகாம்கள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...