சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையாளரிடம் கோரிக்கை..!

கடந்த அதிமுக ஆட்சியில் விடுவிக்கப்பட்ட சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை உடனடியாக அமல்படுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கடந்த அதிமுக ஆட்சியில் விடுவிக்கப்பட்ட சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை உடனடியாக அமல்படுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்தனர்.



கோவை மாநகராட்சி துணை ஆணையாளரை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே. அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், தாமோதிரன் ஆகியோர் சந்தித்தனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் விடுவிக்கப்பட்ட சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்களை உடனடியாக அமல்படுத்த சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாநகராட்சி துணை ஆணையாளரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒப்பந்தங்கள் குறித்த முறையான ஆவணங்கள் இல்லை என கோவையின் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்த நிலையில், அதுதொடர்பான ஆவணங்களை சமர்பிக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலகம் வருகை தந்துள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூறினார்.

மாநகராட்சி பகுதிகளில் அடிப்படை பணிகளுக்காக 3,133-கோடியே 44-லட்சங்கள் செலவில் 119-ஒப்பந்த பணிகள் கடந்த ஆட்சியில் கோரப்பட்டிருந்தது. மேலும், அதிமுக ஆட்சியில் விடுவித்த 541-ஒப்பந்த பணிகளை தற்போதைய அரசு நீக்கியதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டினர்.

மேலும், மக்களுக்கான அத்தியாவசிய பணிகள் முடங்கி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுப்பிய இவர்கள், பருவமழையால் கோவை மாநகராட்சி பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் குற்றச்சாட்டினார்கள்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...