சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: கோவை மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!

தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில், 43-பயனாளிகளுக்கு, ரூபாய் 19.89-லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில், 43-பயனாளிகளுக்கு, ரூபாய் 19.89-லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகள் அன்றாட வாழ்கையில் எதிர்கொள்ளும் சவால்களை, பொதுச் சமூகத்தினர் அறிந்து கொள்ளும் விதமாக ஆண்டுதோறும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.



அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதன் ஒருபகுதியாகக் கோவை சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் 25க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் பங்கேற்றனர்.



இந்த நிகழ்வில் 43-பயனாளிகளுக்கு, ரூபாய்.19.89-லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



இதில் 10-பயனாளிகளுக்கு ஸ்கூட்டர், 10-பயனாளிகளுக்குத் தையல் இயந்திரம், 2-பயனாளிகளுக்கு நவீன செயற்கை கால், 4-பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 5-நபர்களுக்குக் கல்வி உதவி தொகையும், இயற்கை மரணத்தால் இறந்த 16-குடும்பத்திற்கு உதவி தொகையும், தொழில் துவங்கும் 5- மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவியும், வாழ்வாதாரத்திற்காக 2- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது:-



டிஸ்ஏபிள் என்ற வார்த்தை மாற்றம் அடைந்து டிப்ரன்ட்ளி ஏபில்ட் என்று கூறப்படுகின்றது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு, அவர்களுக்கான தேவை குறித்து ஆலோசனை வழங்கப்படுகின்றது என்றார்.

அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தொடர்ந்து கிடைத்து வருகிறது என்றும் அரசின் 100 சதவீத மானியம் மாற்றுத்திறனாளிகளுக்குக் கிடைக்கத் தொடர்ந்து வழிவகை செய்துள்ளதாகவும் கூறினார்.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் இயக்குனர்கள் பங்கேற்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...