ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் போலீசார் அந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தியதில் குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை: கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள குடோனில் 886 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை தடாகம் சாலை ஆர்.எஸ். புரம் பகுதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக ஆர்.எஸ். புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் போலீசார் அந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையில், குடோனில் பதுக்கி வைத்திருந்த 886 கிலோ குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து, சேரன் மாநகர் நேதாஜி குழந்தைகள் பூங்கா பகுதியில் வசிக்கும் கரூர் மாவட்டம் அப்பிபாளையம் செட்டியார் வீதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.