கோவையில் பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் கழிவுநீர்க் கால்வாயை சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள்: ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ்..!

கோவை அரசு மருத்துவமனை அருகே தூய்மை பணியாளர்களை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியில் அமர்த்திய ஒப்பந்ததாரருக்கு, மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் ஒப்பந்தம் மற்றும் நிரந்தர அடிப்படையில் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கோவை அரசு மருத்துவமனையில், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் கழிவுகளை அகற்றியது பெரும் சர்ச்சையை எழுப்பியது.

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, தூய்மை பணியார்களை பணியில் ஈடுபடுத்த கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் மற்றும் இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்பது தொடர் கதையாகி வருவது தான் நிதர்சனம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இந்த நிலையில், நேற்று நடந்த சம்பவத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கையை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை எடுத்துள்ளது. அதன்படி, தனியார் ஒப்பந்ததாரர் பெரியசாமி என்பவருக்கு தூய்மை பணியாளர்களை போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியில் ஈடுபடுத்தியதாக நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பேசிய தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் கூறுகையில், "மாநகராட்சியில் மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் உள்ளன. ஆனால் அவை பெரிய இடங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. சிறிய கால்வாய்கள், கழிவுநீர் செல்லும் இடங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. தூய்மைப் பணியாளர்களுக்கு எந்தப் பணியாக இருந்தாலும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும்", என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...