தொழிலாளர்‌ வருங்கால வைப்பு நிதி அமைப்பு: மின்னணு வாரிசு நியமனத்தை ஊக்குவிக்கும்‌ முயற்சி..!

தொழிலாளர்‌ வருங்கால வைப்பு நிதி அமைப்பானது, மத்திய அரசால்‌ தொடங்கப்பட்ட ஆஜாதி கா அம்ரித்‌ மஹோட்சவின்‌ கீழ்‌, EPFO-வில்‌ பதிவு செய்துள்ள அனைத்து தனியார்‌ நிறுவன உறுப்பினர்களுக்காக, மின்னணு வாரிசு நியமனத்தை ஊக்குவிக்கும்‌ முயற்சியை எடுத்துள்ளது.


கோவை: தொழிலாளர்‌ வருங்கால வைப்பு நிதி அமைப்பானது. மத்திய அரசால்‌ தொடங்கப்பட்ட ஆஜாதி கா அம்ரித்‌ மஹோட்சவின்‌ (இந்திய சுதந்திரத்தின்‌ 75-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்‌) கீழ்‌. EPFO வில்‌ பதிவு செய்துள்ள அனைத்து தனியார்‌ நிறுவன உறுப்பினர்களுக்காக, மின்னணு வாரிசு நியமனத்தை ஊக்குவிக்கும்‌ முயற்சியை எடுத்துள்ளது.

இந்த வசதியின்‌ மூலம்‌ உறுப்பினர்கள்‌ தாங்களாகவே இணைய வழியில்‌ வாரிசு நியமனம்‌ செய்யலாம்‌. இதனை எந்த நேரத்திலும்‌ புதுப்பிக்கலாம்‌.

வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களின்‌ அலைபேசி எண்‌ UAN எண்ணுடன்‌ இணைக்கப்பட்டும்‌, அவர்களின்‌ UAN ன்‌ ஆதார்‌ சரிபார்ப்பும்‌ முடிந்திருந்தால்‌ இந்த வசதியை பெற முடியும்‌. இந்த செயல்முறை மிகவும்‌ பயணர்‌ நட்புடன்‌ உள்ளது.

ஏனெனில்‌ ஒருங்கிணைந்த உறுப்பினர்‌ இடைமுக போர்ட்டலில்‌ உள்நுழைந்தவுடன்‌ மின்னணு வாரிசு தாக்கல்‌ செய்ய ஒரு Pop up சாளரம்‌ காண்பிக்கப்படும்‌.

மின்னணு வாரிசு பதிவேற்றம்‌ செய்யும்‌ போது நினைவில்‌ கொள்ளவேண்டிய விஷயங்கள்‌:

உறுப்பினரின்‌ UAN எண்‌, ஆதாரில்‌ பதிவிட்ட அலைபேசி எண்‌, ஸ்கேன்‌ செய்யப்பட்ட பாஸ்போர்ட்‌ அளவு புகைப்படம்‌ (100 KB-க்கு) மிகையாமல்‌ இருக்கவேண்டும்‌. இவையணைத்தும்‌ உள்நுழைவதற்கு முன்‌ உடனடியாக இருத்தல்‌ அவசியம்,‌ பிறகு இந்த அமைப்பு உறுப்பினர்களுக்கு, அடுத்தடுத்து பதிவிடும்‌ முறையை வழிகாட்டும்‌ இவை உறுப்பினருடைய பதிவிட்ட அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்‌ OTP சரிபார்த்தல்‌ வரை நிகழும்‌.

இந்த மின்னணு வாரிசு நியமன செயல்பாட்டினால்‌ உறுப்பினர்கள்‌ / பயனாளிகள்‌ தங்களது PF பணத்தை திரும்பப்பெறும்‌ படிவங்கள்‌ குறிப்பாக ஓய்வூதிய படிவங்களை இணையவழி மூலமாக ஓய்வு பெறும்‌ நேரத்தில்‌ கூடுதல்‌ ஆவணங்கள்‌ இல்லாமல்‌ தாக்கல்‌ செய்ய உதவுகிறது. இவ்வாறு நியமிக்கப்பட்ட வாரிசுதாரர்கள்‌, உறுப்பினர்கள்‌ திடீரென துரதிருஷ்டவசமாக மரணம்‌ அடைந்தால்‌ இணையவழி மூலமாக படிவங்களை தாக்கல்‌ செய்வதன்‌ மூலம்‌ சிரமமின்றி EPF சேமிப்பை திரும்ப பெறலாம்.‌

எனவே அனைத்து EPF உறுப்பினர்களும்‌ உடனடியாக ஒருங்கிணைந்த உறுப்பினர்‌ இடைமுக போர்டல்‌ மூலம்‌ தங்களது மின்னணு வாரிசை பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்‌. மேலும்‌ அனைத்து EPF உறுப்பினர்களும்‌ ஆதார்‌ மற்றும்‌ வங்கிக்கணக்கு போன்ற அடிப்படை KYC விவரங்களை தங்கள்‌ UAN உடன் இணைத்து EPF-ன்‌ அனைத்து இணையவழி சேவைகளை பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...