கோவையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திறிந்த மாடுகள்..!

கோவையில் போக்குவரத்துக்கு இடையூறாகச் சாலையில் சுற்றித்திரிந்த 9- மாடுகளைப் பிடித்து, அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் வஉசி உயிரியல் பூங்காவில் அடைத்தனர்.


கோவை: கோவையில் போக்குவரத்துக்கு இடையூறாகச் சாலையில் சுற்றித்திரிந்த 9- மாடுகளைப் பிடித்து, அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் வஉசி உயிரியல் பூங்காவில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சுங்கம் மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் கால்நடைகள் சாலைகளில் திரிவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்த கால்நடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. பொதுமக்களின் மற்றும் சமூக ஆர்வலர்களின் புகாரின் பேரில், கால்நடைகளைப் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகச் சாலைகளில் திரியவிட்டால், கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பாக எச்சரிக்கை விடப்பட்டது.

இருப்பினும் கால்நடை உரிமையாளர்கள் மாநகராட்சி அறிவிப்பைக் கண்டுகொள்ளாமல் மாடுகளைச் சாலையில் திரியவிட்டனர். ஆகையால் சுங்கம் மற்றும் உக்கடம் பகுதிகளில் சாலையோரம் சுற்றித்திரிந்த 9-மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்துச் சென்று, வஉசி உயிரியல் பூங்காவில் அடைத்தனர்.

மேலும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், பெரிய மாடுகள் என்றால் ரூ. 3ஆயிரம் எனவும், அளவில் சிறிய மாடுகளுக்கு ரூ.ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை அபராதம் தொகை இருக்கும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...