கோவையில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கால்வாயில் இறங்கி வேலை செய்யும் தூய்மை பணியாளர்கள்..!

மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் உடலில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் கழிவுநீர்க் கால்வாயைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிகழ்வுகளைச் சாலையில் சென்ற ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.


கோவை: மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்குக் கழிவுகளை அகற்றும்போது உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் ஒப்பந்தம் மற்றும் நிரந்தர அடிப்படையில் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்குக் கழிவுகளை அகற்றும்போது உரியப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.



இதனிடையே, கோவை அரசு மருத்துவமனை அருகே கழிவுநீர் கால்வாயில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிலர், உடலில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் அணியாமல் கழிவுநீர்க் கால்வாயைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிகழ்வுகளைச் சாலையில் சென்ற ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரத் துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்க பொதுச்செயலாளர் செல்வம் கூறுகையில், மாநகராட்சியில் மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் உள்ளன. ஆனால் அவை பெரிய இடங்களில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன.

சிறிய கால்வாய்கள், கழிவுநீர் செல்லும் இடங்களில் பயன்படுத்தப்படுவதில்லை. தூய்மைப் பணியாளர்களுக்கு எந்தப் பணியாக இருந்தாலும் உரியப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், என்றார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...