14-வது கோயம்புத்தூர் விழா : மேஸ்காட் சின்னம் அறிமுகம்..!

14-வது கோயம்புத்தூர் விழா வருகிற ஜனவரி 2-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், விழாவிற்கான முன்னோட்ட நிகழ்ச்சியாக, மேஸ்காட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: 14-வது கோயம்புத்தூர் விழா வருகிற ஜனவரி 2-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், விழாவிற்கான முன்னோட்ட நிகழ்ச்சியாக, மேஸ்காட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் விதமாகவும், கோவை மக்களிடையே, மாவட்டத்தின் பெருமைகளை, கலாச்சார நிகழ்வுகளை எடுத்துக்காட்டும் விதமாகவும், கடந்த 2009ம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் விழா என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

ஜனவரி முதல் வாரத்தில் துவங்கி நடைபெறும் இந்நிகழ்வின் போது, பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நாள் தோறும் நடத்தப்படுவது வழக்கம். 2020ம் ஆண்டு மிகச்சிறப்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில் 2021ம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்நிகழ்ச்சி வர்ச்சுவல் எனப்படும் மெய் நிகர் நிகழ்ச்சியாக மட்டுமே நடத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால், இவ்வாண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு, சிறப்பான முறையில் கொண்டாட விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதன்படி 14வது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவை ஒட்டி வருகிற ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 9ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் அரங்குகளிலும், பொது இடங்களில் இந்நிகழ்வுகள் நடத்தப்பட்ட நிலையில், இவ்வாண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செம்மைப்படுத்தப்பட்டுள்ள குளக்கரைகளில் இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. கலை, கல்வி, தொழில், விளையாட்டு, பொழுதுபோக்கு, வணிகம் மற்றும் விருந்தோம்பல் போன்ற நிகழ்வுகள் இந்நிகழ்வில் இருக்கும் என விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.



இதையொட்டி இவ்விழாவிற்கான முன்னோட்ட நிகழ்ச்சி, கோவை வாலாங்குளம் குளக்கரை பூங்காவில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு, விழாவிற்கான மேஸ்காட் எனப்படும் சின்னத்தை அறிமுகப்படுத்தினர். சிக்கூ என பெயரிடப்பட்டுள்ள இந்த சின்னம், தமிழ்நாடு மாநில பறவையான மரகதப்புறாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.



முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா, இது போன்ற விழாக்கள், பெருநகரங்களின் அடையாளமாக மாறும் எனவும், இதன் மூலம் அந்நகரம் குறித்த பெருமைகள் உலகம் முழுவதும் கொண்டு செல்ல வாய்ப்பளிக்கும் எனவும் தெரிவித்தார்.



மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசும் போது, அரசு நடத்தும் விழாக்களைக் காட்டிலும், நகரின் தொழில்துறையினர், மக்களை இணைத்து நடத்தப்படும் இந்நிகழ்வுகள், பெரும் உற்சாகத்தை அளிப்பதாகத் தெரிவித்தார். கோயம்புத்தூர் விழாவின் ஒரு பகுதியாக மின்சார வாகனங்களின் கண்காட்சி, உலகத்தரம் வாய்ந்த வண்ண ஒளி காட்சிகள், சாலைகளில் வண்ணம் பூசுதல், சமையல் போட்டிகள், மாரத்தான் போட்டி, சைக்கிள் போட்டி ஆகியவை நடைபெற உள்ளது.



இவ்வாண்டு முதல் முறையாக மாற்றுத்திறனாளிகளும் பங்கு பெறும் பாராலிம்பிக்ஸ் போட்டிகள், விவசாய கண்காட்சி, கல்லூரி மாணவர்களின் இசை நிகழ்ச்சிகள் ஆகியவையும் இடம்பெற உள்ளது. மேலும் புதிய தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தச் சிறப்புத் தொழில் நிகழ்ச்சி உள்ளிட்ட 120 வகையான நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...