கோவையில் டெங்கு பரவல் அதிகரிப்பு- மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் மக்கள் தொடர்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.



இதில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் கலந்துகொண்டு 342 பயனாளிகளுக்கு 78 லட்சம் மதிப்புள்ள இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள், மற்றும் விபத்து காப்பீட்டுத் தொகை தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாய இடுபொருள்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது வரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.

அனைத்து இடங்களிலும் வீடு வீடாகச் சென்று டெங்கு கொசுக்கள் உள்ளதைக் கண்டறிந்து அதை ஒழிப்பதற்காக 4,000 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அதிக கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கேரள மாநிலத்தில் பரவி வரும் பறவை காய்ச்சல் நமது மாவட்டத்தில் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக 11 சோதனைச் சாவடிகளிலும் மாநில எல்லை தாண்டி வரும் வாகனங்களைக் கண்காணித்து கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மருத்துவக் குழு அமைக்கப்பட்டு பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

முன்னதாக மகளிர் சுய உதவிக் குழு, தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, சுகாதாரத்துறை, சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...