அ.தி.மு.க கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அருண்பிரசாத் மீது பெண் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு..!

அ.தி.மு.க கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்பிரசாத் மீது பெண் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.


கோவை: அ.தி.மு.க கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அருண்பிரசாத் மீது பெண் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக போலியாக வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக உடுமலை ராதாகிருஷ்ணனின் வழக்கறிஞர் திருப்பூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகார் மனு குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண் பிரசாத் கோமங்கலம் அருகே உள்ள அதிமுக கிளைச் செயலாளர் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை தகாத வார்த்தையில் திட்டியதாகவும், கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறி அதிமுக நிர்வாகியின் மனைவி கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் அருண் பிரசாத் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...