கிணத்துக்கடவு அருகே தேவரடிபாளையத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே தேவரடிபாளையத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தேவரடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 39) ஆட்டோ ஓட்டுநரான இவர், நேற்று இரவு கிணத்துக்கடவில் இருந்து தனது ஆட்டோவை ஓட்டிக்கொண்டு தேவரடிபாளையம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தேவரடிபாளையம் பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த நபர் ஒருவர் ஆட்டோவை மறித்து சசிகுமாரைக் கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து சசிகுமாரின் உறவினர் ஜெகதீஷ் என்பவர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரை சசிகுமாருக்குக் கொலை மிரட்டல் விடுத்த கோவிந்தகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பிரிதிவிராஜ் என்பவரைக் கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.